கள்ளக்காதலியின் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கள்ளக்காதலன்...! கேரளாவில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கேரளா கண்ணூரில் மாதமங்கலம் பகுதியை சேர்ந்த 40 வயது ஆட்டோ டிரைவர் அனீஷ் என்பவர்.இவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக இளம்பெண் ஒருவர் அறிமுகமானார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் அனீஷ் பழகி வந்தார்.இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கடந்த ஜூன் மாதம் அனீஷ், அந்த இளம்பெண்ணை அந்தூர் நகராட்சிக்குட்பட்ட பரசினிக்கடவு பகுதிக்கு அழைத்திருக்கிறார்.அவ்வகையில், அந்த இளம்பெண், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளுடன் அங்கு சென்றார். இளம்பெண்ணின் மூத்த மகள் பிளஸ்-2 வும், இரண்டாவது மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

தனது குழந்தைகளுடன் அந்த இளம்பெண், அனீசுடன் விடுதி அறையில் தங்கினார்.அங்கு இரவில் அனைவரும் ஒரே அறையில் படுத்து உறங்கினர்.அப்போது அதிகாலை 2 மணியளவில், 9-ம் வகுப்பு படிக்கும் இளம்பெண்ணின் 14 வயது மகளை அனீஷ் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதனை மூத்த மகளான 12-ம் வகுப்பு மாணவி பார்த்து விட்டார். இதனை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்த அந்த இளம்பெண், அதனை வெளியே தெரிவிக்காமல் அப்படியே மூடி மறைத்துவிட்டார். இருப்பினும் தனக்கு நடந்த கொடுமையை மறக்க முடியாத சிறுமி, அதுபற்றி தன்னுடைய வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து "சைல்டுலைன்" அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அதுபற்றி காவலில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய காவலர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆட்டோ டிரைவர் அனீசை கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

illegal boyfriend harassement illegal girlfriends daughter Shock in Kerala


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->