குஜராத் தொங்கு பாலம் விபத்து: மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் - ஐகோர்ட் - Seithipunal
Seithipunal


குஜராத்தின் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் அக்டோபர் 30ம் தேதி மாலை திடீரென அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஓரேவா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் துருப்பிடித்த, பழைய கேபிள் வயர்கள் மற்றும் அதிக எடை உள்ளிட்டவை விபத்துக்கான காரணிகளாக கூறப்படுகின்றன. இந்நிலையில், குஜராத் தொங்கு பால விபத்து வழக்கை விசாரணைக்கு எடுத்து ஐகோர்ட்டு இந்த சம்பவத்தில் நிலைமையின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கில் பதிலளிக்கும்படி உள்துறை உட்பட பல்வேறு அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் 7 நாட்களுக்கு பின்பு, பால விபத்து சம்பவம் பற்றி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யும்படி தெரிவித்த ஐகோர்ட்டு, குஜராத் தொங்கு பால விபத்தில் மாநில அரசின் கடுமையான நடவடிக்கையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICourt expects strict action from Gujarat government in bridge accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->