திருமண முடிந்த ஆறு மாதத்தில் மனைவியை துண்டு துண்டாட வெட்டிய சைக்கோ கணவர்; ஃபிரிட்ஜில் தலையை பார்த்து அதிர்ந்து போன போலீசார்..! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே காதல் மனைவியைக் கொன்று தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூர கணவனை, போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் பாசிஸ்தாபூர் பைலேனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், இளம் தம்பதி வசித்து வந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசியதால், சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே இரு காவலர்கள் மட்டும் சம்பவ வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அப்போத, வீடு முழுக்க ரத்தக்கறைகளுடன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் ஒருவரின் சடலம் நடு வீட்டில் கிடந்துள்ளது. உடனடியாக உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, சம்பவ வீட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பெண்ணின் உடலை கைப்பற்றி  அதிகாரிகள் வீடு முழுக்க தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துண்டிக்கப்பட்ட தலை, கருப்பு நிற பாலித்தீன் பையில் சுற்றப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

அத்துடன், பெண்ணின் கை, கால் விரல்களும் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தன. தொடர் தேடுதலில் கூர்மையான ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அறையினுள் பல மதுபாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண்  25 வயதான ரியா என்பதும், இதே வீட்டில் கணவர் ராமானுஜன் கோஸ்வாமியுடன் வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அவரது கணவர் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் கிடைத்த தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஃபேன்சி பஜாரில் வேலைப் பார்த்து வந்த கொலை செய்யப்பட்த ரியா, 'ஊபர்' ஓட்டி வந்த ராமானுஜனை 06 மாதங்களுக்கு முன் தான் திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் பலமுறை தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடால் தகராறு ஏற்பட்டதாக பக்கத்து வீட்டுக்காரர் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனால் ரியாவை கொலை செய்தது அவரது கணவரா? என்ற கோணத்தில் அவரை தேட ஆரம்பித்தனர். அப்பொழுதுதான் ராமானுஜன் கோஸ்வாமி, கவுகாத்தியின் ஹதிகான் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

அதன்பின்னர், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியைக் கொன்று தலையை துண்டித்து பிரிட்ஜில் வைத்து விட்டு தப்பிச் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். 

2022-இல் டெல்லியில் லிவின் ரிலேஷன்ஷிப்பில் வசித்த ஷ்ரத்தா வால்கரை ஆஃப்தாப் அமீன் என்பவர் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவத்தைப் போலவே தற்போது அசாமியில் ரியா கொலையும் அரங்கேறியுள்ளது. விசாரணையின் முடிவிலேயே அசாமை உலுக்கிய ரியா கொலையின், முழு பின்னணியும் வெளிவரும். இந்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband dismembers wife near Assam puts her head in fridge


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->