ஐயப்பன் பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி.. சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை.!! - Seithipunal
Seithipunal


நிலக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்க திருவாங்கூர் தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. 

சபரிமலைக்கு அருகே உள்ள நிலக்கல் பகுதியில் திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஏற்கனவே விமான தளம் அமைக்கப்பட்டது. கொச்சியிலிருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டம் போதுமான வரவேற்பைப் பெறாததால் அது கைவிடப்பட்டது. 

தற்போது அந்த விமான தளம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. சபரிமலைக்கு வரும் பணக்கார பக்தர்கள் ஹெலிகாப்டரில் வர வசதியாகவும், சபரிமலை பயணத்தை எளிதாக்கவும் ஹெலிகாப்டர் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு அழைப்பு விடுத்துள்ளது. 

நிலக்கல்லில் உள்ள விமான தளத்தை மூன்று ஆண்டுகளுக்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அப்படி ஒருமுறை ஹெலிகாப்டர் இறங்குவதற்கு தேவசம் போர்டு 20 ஆயிரம் வசூலிக்கிறது. இதன் மூலம் தேவசம் போர்டுக்கு நிதி கிடைப்பதோடு, பயணம் எளிதாக இருப்பதால் விஐபிகள், வசதிமிக்க பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு வர விரும்புவர்கள். இதனால் கோவிலுக்கு வருமானம் அதிகரிக்கும் எனவும் தேவஸ்தனம் போர்டு கருதுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

helicopter service to sabarimala


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->