குடியரசு தினம் : விமானங்களின் சாகசம்.! பார்வையாளர்களுக்கு தடையான மூடு பனி.!! - Seithipunal
Seithipunal


நேற்று நாட்டின் 74-வது குடியரசு தின விழா தலைநகரான டெல்லியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் தங்களுடைய ஊர்திகளுடன் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் அழையா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் எல் சிசி கலந்துகொண்டு, விழாவில் நடைபெற்ற பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். 

இதேபோல் பல சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அந்த வகையில் விண்ணில் சுமார் 50 விமானங்கள் அணிவகுத்து சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், மூடுபனியால் அவற்றை பார்வையாளர்கள் முழுமையாகக் கண்டு ரசிப்பதற்கு மூடுபனி ஒரு தடையாக வந்து அமைந்து விட்டது. 

இதேபோல், பார்வையாளர்கள் தங்கள் செல்போன் கேமராக்களில் படம் பிடிப்பதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் மூடுபனியால் தெளிவாக தெரியாததால் கவலை அடைந்தனர். இந்த நிலையில், டெல்லியின் காற்றுத்தரக்குறியீடு மதியம் 12 மணிக்கு 287 ஆக இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy fog peoples not saw flights adventure in delhi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->