பெலகாவி மந்திரியின் முன்னிலையில் பரபரப்பான மோதல் ...! கணவன்-மனைவி சுவாரஸ்ய கலாட்டா...!
heated confrontation presence Belagavi minister interesting argument between husband and wife
பெலகாவி மாவட்ட மதினஹள்ளி கூட்டுறவு வங்கிக்கான தலைவர் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஒரு வாரமாக மாயமாகி இருந்த மாருதி என்பவர் திடீரென பங்கேற்றார்.

அவரை கண்ட மனைவி, அமைச்சர் சதீஸ் ஜார்கிகோளியின் முன்னிலையிலேயே கணவரை சட்டையைபிடித்து இழுத்து, சரமாரியாக அறைந்தார்.இதைக் கண்டு அமைச்சர் திகைத்த நிலையில் நின்று போனார்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்த, முன்னாள் எம்.பி. ரமேஷ் கத்தி, தனது அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என சவால் விட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.இந்த பிரச்சனையின் இறுதியில் காவலர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர்.
மேலும், மாருதியை சிலர் கடத்திச் சென்றதாகக் தெரிவித்து, அவரது குடும்பத்தினர் காவலில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் முழுவதும் பெலகாவியில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
heated confrontation presence Belagavi minister interesting argument between husband and wife