போலே பாபா யார்?! 23 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ப்பு மகளை வைத்து செய்த சேட்டை அம்பலம்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில்  ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா கீழே இறங்கி வந்த போது கூட்டத்தினர் அனைவரும் அவரிடம் ஆசி வாங்க முண்டியடித்துள்ளனர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாகத் தான் இந்த சம்பவம் நடந்துள்ளதாக, சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உ.பி மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது. மேலும் நீதி விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் வழங்குவதோடு, உயிரிழந்தோரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க உ. பி. முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


யார் இந்த ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா? 23 ஆண்டுகளுக்கு முன்பே வளர்ப்பு மகளை வைத்து செய்த சேட்டை அம்பலம்!

ஆன்மீக சொற்பொழிவாளர் போலே பாபா ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருப்பது தற்போது இந்த கொடூர சம்பவத்தின் மூலம் வெளிவந்துள்ளது. 

சூரஜ் பால் மற்றும் நாராயண் சங்கர் ஹரி என்ற இயற்பெயர் கொண்ட இவரை, இவரின் ஆதரவாளர்கள் போலே பாபா என்று அழைத்து வருகின்றனர். 

ஏற்கனவே கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரிழந்த தனது வளர்ப்பு மகளை (தனது மருமகளையே தனது வளர்ப்பு மகளாக) உயிர்த்தெழுவதற்காக மாந்திரீகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 

கடந்த 2000ம் ஆண்டு ஆக்ராவில் போதைப்பொருள் மற்றும் மாந்திரீக தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார் போலெ பாபா. மேலும் இடுகாட்டில் புதைக்கப்பட்ட பிணங்களை தோன்றியதற்காக போலே பாபாவின் ஆதரவாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற திருச்சி தகவலும் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hathras Tragedy pole baba background


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->