குஜராத் பாலம் விபத்து: முதற்கட்ட அதிர்ச்சி தகவல் தொடர்ந்து 7000 பாலங்கள் ஆய்வு தொடக்கம்...!
Gujarat bridge accident Following initial shocking information inspection of 7000 bridges begins
குஜராத்தின் காம்பிரா-முக்பூர் பாலமானது, ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் வதோதராவின் பாத்ரா தாலுகாவில் மாஹி ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த பாலம் இடிந்து விழுந்ததால், அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் இதுவே 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆற்றில் விழுந்து மாயமானவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.இந்த விபத்து குறித்து மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு அதன் 'பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்' என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் எதிரொலியாக குஜராத் மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Gujarat bridge accident Following initial shocking information inspection of 7000 bridges begins