இது வெறும் ஆரம்பம் தான்.. ஆப்ரேசன் சிந்தூர் குறித்து ஆளுநர் கருத்து.!
governor rn ravi tweet about operation sindoor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாதிகளின் ஒன்பது நிலைகளை நள்ளிரவில் அதிரடியாக இந்திய ராணுவம் அழித்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர் வெறும் தொடக்கம் தான்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
governor rn ravi tweet about operation sindoor