பஞ்சாப் : அரசு அலுவலகங்களின் பணி நேரம் மாற்றம்.! இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களின் பணி நேரம் மாற்றம்.! இதுதான் காரணமா?

தற்போது கோடை காலம் என்பதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதனால் பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரத் தேவைகளை குறைக்கும் விதமாக மாநில அரசு அதிரடியான ஒரு முடிவு எடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றியமைப்பதற்கு பஞ்சாப் அரசு முடிவு செய்து உள்ளது. 

அதன்படி அடுத்த மாதம் மே 2-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று முதலமைச்சர் பகவந்த் சிங் மன் அறிவித்துள்ளார். 

இந்த முடிவின் மூலம் 300 முதல் 350 மெகாவாட் வரையிலான மின்சாரம் சேமிக்கப்படும். பொதுமக்களும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்னரே அரசு அலுவலகங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government office working time change in punjap for save electricity


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->