#BREAKING || ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டதால் பரபரப்பு..!!
Goods Train derails again in Odisha
ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூருவில் இருந்து ஹௌரா நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் தற்போது வரை 275 பேர் உயிரிழந்த உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது விபத்து ஏற்பட்ட பகுதியில் ரயில் தண்டவாளங்கள் சீர் செய்யப்பட்டு ரயில்கள் வழக்கமாக இயங்க தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் ஒரிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் டுங்குரியில் இருந்து பர்கருக்கு ரயில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. பர்கர் மாவட்டத்தில் உள்ள சம்பர்தாரா அருகே சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒரிசாவில் அடுத்தடுத்து ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Goods Train derails again in Odisha