மகாராஷ்டிரா : மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி காதலருடன் மீட்பு.!
girl found after three years with boy friend in maharastra
மகாராஷ்டிரா : மூன்று வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி காதலருடன் மீட்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தைச் சேர்ந்த பதினேழு வயது சிறுமி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், சிறுமியின் இருப்பிடம் தெரியவில்லை. நாளடைவில் போலீசார், இந்த வழக்கை கெட்டப்பில் போட்டுள்ளனர். இந்நிலையில், முடிக்கப்படாத வழக்குகளை விசாரணை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு காணாமல் போன சிறுமியை அவரது ஆதார் எண் கொண்டு கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு சிறுமியை ஒடிசாவில் மீட்டுள்ளனர். அதன் பின்னர் போலீசார் அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமி தனது காதலருடன் சென்றது தெரியவந்தது.
வீட்டை விட்டு காதலருடன் ஓடி வந்து திருமணம் செய்து கொண்ட சிறுமி தற்போது மேஜர் ஆன நிலையில், அவரை காவல் துறையினர் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்தனர். மேலும், சிறுமியை திருமணம் செய்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டு, காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
English Summary
girl found after three years with boy friend in maharastra