சோகம்.. சிறுத்தை தாக்கி சிறுமி பலி.!!
girl died for leopard attack in uttar pradesh
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச்சில் மாவட்டத்தை சேர்ந்தவர் சிறுமி சஞ்சனா. இவர் அப்பகுதியில் உள்ள விவசாய வயலுக்கு சென்றபோது புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று, திடீரென சிறுமியை தாக்கி கழுத்தை கவ்விப்பிடித்து இழுத்துச் சென்றது.

இதனால் உயிருக்கு போராடிய சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை, சிறுமியை விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. உடனே பொதுமக்கள் சிறுத்தை தாக்கியதில், படுகாயமடைந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
girl died for leopard attack in uttar pradesh