இந்தியாவில் 14 மாத்திரைகளுக்குத் தடை - எந்தெந்த மாத்திரைத் தெரியுமா?
fourteen tablets ban in india
இந்தியாவில் 14 மாத்திரைகளுக்குத் தடை - எந்தெந்த மாத்திரைத் தெரியுமா?
மத்திய அரசின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் பரிந்துரையின் கீழ் சமீபத்தில், கலவை மருந்துகள் அடங்கிய எஃப்டிசி ரக மருந்துகளில் சில மருந்துகள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த ஆய்வின் முடிவில் ஆய்வுக்குட்படுத்தபட்ட மருந்துகளில் பதினான்கு மருந்துகளால் மனிதர்களின் உடல்நலனுக்கு அபாயம் ஏற்படலாம் என்றுத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி பதினான்கு எஃப்டிசி ரக மருந்துகள் தடை செய்யப்பட உள்ளது.

அதன்படி, இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் என்று அனைத்தும் மத்திய அரசால் தடை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தடைக்கு ஆளாகி உள்ள கலவை மருந்துகளின் முழுமையான பட்டியல் இதோ:-
1. Salbutamol + Etofylline + Bromhexine
2. Ammonium Chloride + Sodium Citrate + Chlorpheniramine Maleate + Menthol
3. Phenytoin + Phenobarbitone Sodium
4. Chlorpheniramine + Codeine Phosphate + Menthol Syrup
5. Salbutamol + Bromhexine
6. Paracetamol + Bromhexine + Phenylephrine + Chlorpheniramine + Guaiphenesin
7. Dextromethorphan + Chlorpheniramine + Guaiphenesin + Ammonium Chloride
8. Nimesulide + Paracetamol dispersible tablets
9. Amoxicillin + Bromhexine
10. Pholcodine + Promethazine
11. Chlorpheniramine Maleate + Dextromethorphan + Guaiphenesin + Ammonium Chloride + Menthol
12. Chlorpheniramine Maleate + Codeine Syrup
13. Ammonium Chloride + Bromhexine + Dextromethorphan
14. Bromhexine + Dextromethorphan + Ammonium Chloride + Menthol
மேற்கூறிய பட்டியலில் உள்ள மருந்துகள் அனைத்தும் இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
fourteen tablets ban in india