தீவிரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகள் முடக்கம்.! - Seithipunal
Seithipunal


தீவிரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகள் முடக்கம்.!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பதினான்கு மொபைல் செயலிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பின்னர், உள்துறை அமைச்சகம் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் அதன் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து இந்த செயலிகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் பயன்படுத்துபவர்களின் அடையாளம் வெளியே தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளன என்று சிலர் தெரிவிக்கின்றனர்.

தீவிரவாதிகள் இந்த செயலிகள் மூலமாக தங்களின் உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்றும் பிற பகுதிகளில் தங்களின் தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளனர். 

மேலும், இந்த செயலிகள் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதி இளைஞர்களிடம் தீவிரவாதக் கொள்கைகள் திணிக்கப்படுவதாக தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen mobile apps closed in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->