ஆந்திராவில் பயங்கரம் || பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. பறிபோன 4 உயிர்.!
four peoples died and 29 peoples injured bus accident in andira
ஆந்திராவில் பயங்கரம் || பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. பறிபோன 4 உயிர்.!
ஆந்திரா மாநிலத்தில் உள்ள அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சோடாவரத்தில் இருந்து படேறு பகுதிக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இதையடுத்து இந்த பேருந்து பாடேறு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடியுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
four peoples died and 29 peoples injured bus accident in andira