மஹாராஷ்டிரா - தலித் இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் - காரணம் என்ன?
four dalit youths attack in maharastra
மஹாராஷ்டிரா - தலித் இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த சம்பவம் - காரணம் என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமது நகர் மாவட்டம் ஸ்ரீராம்பூர் தாலுகாவில் ஹரேகான் கிராமத்தில் ஆடு, புறாக்கள் திருட்டுப்போன விவகாரத்தில் நேற்று குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேர் தலைமறைவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தெரிவித்ததாவது, "ஸ்ரீராம்பூர் கிராமத்தில் ஆடு மற்றும் புறாக்கள் திருடு போனதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கடத்திச் சென்று, அவர்களை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதனை அவர்களே வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த கொடூரத் தாக்குதல் ஆடு, புறாக்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்றுத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வாலிபர்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஆடு, புறாக்களைத் திருடியதாக பட்டியல் சமூக இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four dalit youths attack in maharastra