கொலையை விபத்தாக மாற்ற நினைத்த வளர்ப்பு தாய்...! – சிசிடிவி காட்சியில் வெளிவந்த உண்மை..!
foster mother who wanted turn into murder accident truth revealed CCTV footage
கர்நாடக பீதர் மாவட்ட காந்திகஞ்ச் பகுதியில், 7 வயது ஜானவி என்ற சிறுமி கடந்த மாதம் 27-ஆம் தேதி வீட்டு 3-வது மாடியிலிருந்து விழுந்து பலியானதாக ஆரம்பத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், “விளையாடியபோது கால் தவறி விழுந்தது” என காவலர்கள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.ஆனால் சில தினங்களிலேயே இந்த வழக்கு அதிர்ச்சி திருப்பமெடுத்தது.

இதில் பக்கத்து வீட்டு சிசிடிவி காட்சிகளில், ஜானவி விழும் தருணத்தில் அவரது வளர்ப்பு தாய் ராதா அருகில் நின்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விசாரணையில், 3-வது மாடியில் இருக்கையை மாற்றி வைத்து அதன்மீது ஜானவியை ஏற வைத்தபின், அவளை தள்ளியதே ராதா என உறுதி செய்யப்பட்டது.
மேலும், சித்தாந்தின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தான் ஜானவி. அந்தத் தாய் 2023-ஆம் ஆண்டு இறந்தபின், சித்தாந்த் ராதாவை 2 -வது மனைவியாக மணந்திருந்தார்.
அந்தப் பெண்ணே ஜானவியின் உயிரைப் பறித்திருப்பது குடும்பத்தினரையும், அப்பகுதியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு சான்றாகக் கிடைத்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த காந்திகஞ்ச் காவலர்கள் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்பதில் உறுதி பெற்று, ராதாவை கைது செய்துள்ளனர்.
English Summary
foster mother who wanted turn into murder accident truth revealed CCTV footage