ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.Y.S.ராஜசேகர ரெட்டி அவர்கள் நினைவு தினம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.Y.S.ராஜசேகர ரெட்டி அவர்கள் நினைவு தினம்!

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான ராஜசேகர ரெட்டி
1949ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தி புலிவெந்துலா மாவட்டத்தில் பிறந்தார். புலிவெந்துலா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக ஆறு முறை தேர்தல்களில் வென்றார். 1980 ஆம் ஆண்டுமுதல் 1983 வரை மாநில நல்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சகப் பொறுப்புகளை வகித்தார். 

 இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த முதல் தலைவர் ஆவார். மத்திய அரசியலுக்குச் சென்ற இவர், கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் நான்கு முறை (1989, 1991, 1996, 1998) தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்

  1999 முதல் 2004 வரை மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அந்த காலகட்டத்தில் இவர் மேற்கொண்ட 1400 கிலோமீட்டர் நடைப்பயணம் இவருடைய அரசியல் செல்வாக்கினைப் பெருமளவுக்கு உயர்த்தியது

 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் காங்கிரசை வெற்றி பெறச் செய்து முதல்வராகப் பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இவருடைய தலைமையில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற இரண்டாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

 மேலும் இரண்டு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசித் திட்டம், 'ஆரோக்கியஸ்ரீ' எனப்படும் ஏழை எளியோருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்தார். இவ்வாறு பல்வேறு திட்டத்தை கொண்டுவந்த இவர் 2009ஆம் ஆண்டு, செப்டம்பர் 2 ஆம் தேதி வானூர்தி விபத்தில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Chief Minister of Andhra Pradesh Mr Y S Rajasekhara Reddys remembrance day


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->