'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' கூட்டாட்சியை பலவீனப்படுத்தும்; அது நாட்டுக்கு அவசியமானது என்று அர்த்தமல்ல': முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா..!
Former Chief Justice Sanjiv Khanna says One Nation One Election Bill will weaken federalism
'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையின் படி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பில், அதனை செயல்படுத்த மக்களவையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவிடம் தனது எழுத்துப்பூர்வ கருத்துக்களை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்வைத்துள்ளார். அதாவது, 'ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா' கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் என்றும், ஒரு சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியானாலும், அது நாட்டுக்கு அவசியமானது என்று அர்த்தமல்ல என்று குறிப்பிட்டுள்ளளார்.

அடுத்ததாக, சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க இந்த மசோதா தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது மறைமுக ஜனாதிபதி ஆட்சிக்கு சமம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தேர்தல்கள் வெறும் தற்செயல் நிகழ்வுதான் என்றும், அரசியலமைப்பால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றல்ல என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Former Chief Justice Sanjiv Khanna says One Nation One Election Bill will weaken federalism