கதிகலங்கி இருக்கும் பைஜூஸ் ஊழியர்கள் - அதிரடி காட்டும் புதிய சிஇஓ.! - Seithipunal
Seithipunal


கதிகலங்கி இருக்கும் பைஜூஸ் ஊழியர்கள் - அதிரடி காட்டும் புதிய சிஇஓ.!

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் புதிய சிஇஓ-வாக அர்ஜூன் மோகன் பதவியேற்றார். இவர் பதவிக்கு வந்த சில நாட்களில் பைஜூஸ் நிறுவனத்தின் கீழ் இருக்கும் பல வர்த்தகத்தை ஒன்றிணைக்க உள்ளதாக உயர்மட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். 

இந்த இணைப்பின் பணி அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள வேளையில் பைஜூஸ் நிறுவனத்தில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கை நடைபெற உள்ளது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பைஜூஸ் நிறுவனத்தில் 4500 முதல் 5500 ஊழியர்கள் வரையில் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படி பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலில் நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிநீக்கம் பைஜூஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் கீழ் இருக்கும் வர்த்தகங்களில் மட்டும் தான் இருக்கும். 

இதன் கிளை நிறுவனங்களில் இருக்காது என்றும் தகவல் வந்துள்ளது. இந்த பணிநீக்க சுற்றில் உயர் அதிகாரிகள் அதிகப்படியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பணிநீக்கம் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் வர்த்தகம், சேவைகள் தற்காலிகமாக குறுகிய காலத்திற்கு பாதிக்கப்பட்டாலும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிறுவனத்திற்கு இத்தகைய முடிவு மிகவும் முக்கியமானதாக உள்ளது என்று தலைமை நிர்வாகம் ஆணித்தரமாக நம்புகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

five thousand employees layout from byjus company


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->