பாஜக நிர்வாகி வழக்கில் கவனக்குறைவு -19 போலீசாருக்கு ஆப்பு!
five police officers suspend for up bjp harassment case issue
பாஜக நிர்வாகி வழக்கில் கவனக்குறைவு - 5 போலீசார் இடைநீக்கம்; 14 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்.!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் பா.ஜ.க. நிர்வாகி மசூம் ராசா ரகி. மாவட்ட சிறுபான்மையின தலைவராகவும் இருந்து வரும் இவர் கடந்த மாதம் 17 வயது சிறுமி ஒருவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அதனை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சிறுமியின் தந்தை சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் படி போலீசார் ராசா மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அதன் பின்னர் இந்த வழக்கில் நீதிபதி நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக சாட்சியம் கொடுத்ததன்பேரில் ராசா நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் குற்றவாளியான ராசா திடீரென தலைமறைவானதனால் வழக்கில் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி ஒரு உதவி கினால் ஆய்வாளர் உள்பட 5 போலீஸ்காரர்களை மாநில போலீஸ் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் பதினான்கு காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமறைவான ராசாவை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.
English Summary
five police officers suspend for up bjp harassment case issue