கோவா அர்புரா கேளிக்கை விடுதியில் தீ...! - உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்...! - Seithipunal
Seithipunal


கோவா மாநில தலைநகர் பனாஜி அருகே உள்ள அர்புரா கிராமத்தில் பிரபல கடற்கரை கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பினால் உருவான இந்த தீ விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கோவாவில் அர்புராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் உள்ளேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் உடன் தொடர்பு கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தேவையான உதவி செய்து வருகிறது” என்று கூறினார்.

மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire breaks out at Arpura entertainment complex Goa Prime Minister offers relief families deceased


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->