ஆந்திராவில் பரபரப்பு - அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க் நடந்தது என்ன?
fire accident in andira petrol bunk
ஆந்திராவில் பரபரப்பு - அதிக சத்தத்துடன் வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க் நடந்தது என்ன?
ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு அருகே பட்டாசு குடோன் ஒன்று உள்ளது.
இந்த குடோனில் திடீரென நேற்று அதிகாலை பட்டாசுகள் வெடித்து சிதறி அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் விழுந்தது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து ஓடினர்.

பட்டாசுகள் விழுந்ததில் பெட்ரோல் பங்க் தீ விரித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பங்க் ஊழியர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி அவர்கள் விரைந்து வந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதை அடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டாசு பதுக்கி வைத்தவர்கள் யார்? குடோனில் பட்டாசு வைக்க அனுமதி வாங்கி உள்ளார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident in andira petrol bunk