இந்திய விமானங்களில் பணிபுரிவோரில் 15 சதவீதம் பேர் பெண்கள் - அறிக்கையில் தகவல்.! - Seithipunal
Seithipunal


இந்திய விமானங்களில் பணிபுரியும் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இது உலகளவில் சராசரியான 5 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 244 விமானிகள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதுவே, இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வருடத்திற்கு ஆயிரம் விமானிகள் தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல், வணிக விமானிகளின் வருடாந்திரத் தேவையானது ஒரு விமான நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், விமான நிறுவன விரிவாக்கத் திட்டம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு உள்நாட்டு விமான நிறுவனங்களில் 67 வெளிநாட்டு குடிமகன்கள் உள்பட தோராயமாக 10,000 விமானிகள் உள்ளனர். நாட்டில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் 35 அங்கீகரிக்கப்பட்ட விமானப் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவை 53 தளங்களில் இயங்குகின்றன" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fifteen percentage womans workforce in indian airlines


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->