கேரளா: தன்னை தாக்கிய சிறுத்தையை வெட்டிக்கொன்ற விவசாயி!
farmer killed leopard in kerala
கேரளத்தில் கோபாலன் என்பரை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் கோபாலன் அந்த சிறுத்தையை அறிவாளால் வெட்டி கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மான்குளம் பகுதியில் சிறுத்தை தொடர்ந்து கால்நடைகளை கொன்று வந்தது. இந்த நிலையில், அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து, நேற்று காலை 7 மணியளவில், கோபாலன் என்பவர், தனது சகோதரர் மகன் சோமராஜனுடன் விவசாய நிலத்துக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென கோபலனை தாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபாலன் தப்பியோட முயன்றுள்ளார்.
இருப்பினும், அந்த சிறுத்தை மீண்டும் கோபலனை தாக்கியது. இதனால், கோபாலன் தனது கையில் இருந்த அரிவாளால் சிறுத்தையின் தலை மற்றும் வயிறு பகுதியில் வெட்டினார்.
இதில் சிறுத்தை உயிரிழந்தது. இதனையடுத்து, சிறுத்தை தாக்கியதில் பலத்த காயமுற்ற கோபலனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தற்காப்புக்காக சிறுத்தையை கொன்ற கோபலன் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என கேரள வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
English Summary
farmer killed leopard in kerala