விளை நிலத்திற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.! காட்டு யானை தாக்கி விவசாயி பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் விளை நிலத்திற்கு சென்றபோது காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மடள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவராஜ். இவர் வழக்கம் போல் தனக்கு சொந்தமான விளை நிலத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தேவராஜை விரட்டி, காலால் மிதித்து தாக்கியுள்ளது.

இதையடுத்து தேவராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் யானையை விரட்ட முயன்றனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டுவதற்கு அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர், விளைநிலத்திற்கு யாரும் தனியாக செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer killed by elephant attack in Karnataka


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->