“விவசாயி வாங்கிய ₹3 கோடி பென்ஸ் காரு!” — ‘நட்புக்காக விஜயகுமார் போல.. கார் ஷோரூமில் சம்பவம் செய்த விவசாயி! - Seithipunal
Seithipunal


விவசாயி ஒருவர் வேஷ்டி, தலைப்பாகை, குர்தா அணிந்தபடி, ரூ.3 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் GLS காரை வாங்கி, கம்பீரமாக ஓட்டிச்செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிரடியாக வைரலாகி வருகின்றன.இந்த காட்சி பார்த்த பலருக்கும், சரத்குமார் மற்றும் விஜயகுமார் நடித்த ‘நட்புக்காக’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற காட்சியே நினைவுக்கு வந்துள்ளது.

1998ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில், கிராமத்து ஆளாக வந்த விஜயகுமார், கார் ஷோரூமில் கார் பார்க்கும் போது, மேனேஜர் “இவரெல்லாம் எங்கே கார் வாங்குவார்?” என்று ஏளனமாகப் பேசுவார். அதற்கு பதிலாக விஜயகுமார், மூட்டையிலிருந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து, “இதுதான் என் பதில்” என்று காட்டுவார்.
அந்தக் காட்சி பலரின் மனதிலும் இன்னும் நிலைத்து நிற்கும் வகையில் ‘கிளாசிக்’ ஆனது.

இதேபோல நிஜ வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது.விவசாயி ஒருவர், தனது மனைவியுடன் சேர்ந்து, புதிய மெர்சிடஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ் எஸ்யூவி காரை வாங்குவதற்காக, பாரம்பரிய உடையில் ஷோரூமில் வந்துள்ளார். காருக்கு மாலை போட்டு வைத்து, ஆரத்தி எடுத்துப் பிரார்த்தனை செய்து, புன்னகையுடன் கம்பீரமாக காரை ஓட்டிச் சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அந்த வீடியோவை பகிர்ந்தவர்கள், “விவசாயிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்ற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளனர்.
அதில், விவசாயி தம்பதியர், காருக்கு பொட்டு வைத்து, “புது கார், புது தொடக்கம்” என ஆனந்தமாக முகத்தில் ஒளி பொங்கும் நிலையில் காணப்படுகிறார்கள்.இதனால், “உழைப்பாளிக்கு உழைப்பின் பலன் இது தான்!” என்ற உணர்வில் நெட்டிசன்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சிலர், இது புதிய வீடியோ அல்ல என்று கூறுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது விவசாயி தந்தைக்கு மகன் கிப்டாக இந்தக் காரை வாங்கிக் கொடுத்ததாக அதே வீடியோ வெளியானது. தற்போது அதை மீண்டும் ட்ரெண்ட் செய்து வைரலாக்கியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இன்னும் பலர்,“விவசாயிகள் தான் உண்மையான இந்தியாவின் முதுகெலும்பு!”“உழைக்கும் கையை யாரும் தாழ்வாக எண்ணாதீர்கள்!”என்ற கருத்துக்களுடன் அந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பழமொழி சொல்கிறது — “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு நெல் மிஞ்சாது” — ஆனால் இந்த வீடியோ அதற்கு மாறாக ஒரு புதிய செய்தி சொல்கிறது:“உழைப்பால் பென்ஸ் கூட வாங்க முடியும்!”

சமூக வலைதளங்களில் தற்போது இந்த விவசாயியின் சாதனை வீடியோவுக்கு லட்சக்கணக்கான பார்வைகள், ஆயிரக்கணக்கான பாராட்டுகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer bought a 3 crore Benz car Like Vijayakumar for friendship the farmer who committed an incident in a car showroom


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->