77-வது குடியரசு தின விழா; தலைமை விருந்தினர்களாக பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்..! - Seithipunal
Seithipunal


இந்திய குடியரசு தின விழா ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருட இந்திய குடியரசு தினக் கொண்டாட்டத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.

இந்த இரண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்கள் ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகின்றனர். மேஅத்துடன், அவர்கள் ஜனவரி 27 அன்று நடைபெறும் 16வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கும் இணைத் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்த வருகையின் போது, ​​ஐரோப்பிய ஆணையத் தலைவர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கோஸ்டா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பார்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட மற்றும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படும் இந்திய-ஐரோப்பிய கவுன்சில் வர்த்தக மன்றத்திலும் இவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 2004 முதல், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரு இந்தியா - ஐரோப்பிய யூனியனின் வர்த்தக ஒப்பந்தமும் இறுதி கட்டத்தில் உள்ளன. தலைவர்களின் உச்சி மாநாட்டிற்கு முன்பே, இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இரு தரப்பினரும் மிக அருகில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

European Union leaders to participate as chief guests at the 77th Republic Day celebrations


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->