அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! ரூ. 17,000 கோடி பணமோசடி வழக்கு தீவிரம்!
Enforcement Directorate summons Anil Ambani 17000 crore money laundering case intensifies
அமலாக்க இயக்குநரகம் கடன் மோசடி குறித்து ரிலையன்ஸ் குழுமத் தலைவர் 'அனில் அம்பானி'க்கு சம்மன் அனுப்பியுள்ளது. அண்மைக்காலமாக ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அணில் அம்பானி ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து இந்த மாதம் 5 -ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.ஏற்கனவே,ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் திடீர் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனைகளை நடத்தியது.
குறிப்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த 3 நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றனர்.
English Summary
Enforcement Directorate summons Anil Ambani 17000 crore money laundering case intensifies