'விவோ இந்தியா' நிறுவனம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்: காரணம் இதுதான்!
Enforcement department filed charge sheet against Vivo India company
அமலாக்கத்துறை, சீனாவை தலைமை இடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்திய கிளையான 'விவோ இந்தியா' மீது பண மோசடி விவகாரத்தின் கீழ் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த வருடம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் இந்தியாவில் வரி பணம் கட்டுவதை தவிர்க்க விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ. 62,476 கோடியை சட்டவிரோதமாக அனுப்பியது தெரியவந்துள்ளது.
இதில் பல சீனர்களும் இந்திய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் இயக்குனர், சீனாவை சேர்ந்தவர் மற்றும் இரண்டு பட்டைய கணக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பொருளாதார நிலைமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது விசாரணை ஆவணங்களில் தெரிவித்துள்ளனர்.
மேலும் 10 வருடங்களுக்கு முன்பு விவோவுடன் லாவா நிறுவனம் இணையும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இருப்பினும் சீன நிறுவனம் அல்லது விவோ நிறுவனத்துடன் எந்த ஒரு பண பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவில்லை என லாவா நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Enforcement department filed charge sheet against Vivo India company