தொடரும் சோகம்... ஊருக்குள் புகுந்த யானைகள் மின்சாரம் பாய்ந்து பலி!  
                                    
                                    
                                   Elephants die of electrocution
 
                                 
                               
                                
                                      
                                            ஜார்கண்ட், கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் இரண்டு குட்டி யானைகள் உட்பட 5 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஜார்கண்ட் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள பெனியசை கிராமத்தில் நேற்றிரவு யானை கூட்டம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளை கடக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக அப்பகுதி வன அலுவலர் தெரிவித்துள்ளார். 
இது குறித்து தகவல் அறிந்த வன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மந்தையில் இருந்த 4 யானைகளை அங்கிருந்து விரட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து உயிரிழந்து கிடந்த யானைகளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பதாக வன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பாக கிராமவாசிகள், இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானைகள் கூட்டமாக வந்து செல்கின்றன என தெரிவித்தனர். 
 
                                     
                                 
                   
                       English Summary
                       Elephants die of electrocution