திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மின்சார பேருந்துகளை நன்கொடையாக அளித்த நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு காணிக்கைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 மோடி மதிப்புள்ள 10 மின்சார பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளை ஹைதராபாத்தில் உள்ள எலக்ட்ரா எனும் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து திருப்பதி தேவஸ்தான ஓட்டுனர்களுக்கு மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக இலவச போக்குவரத்து பயன்பாட்டிற்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Electra company 10 electric bus to Thirupathi elumalaiyan temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->