கடும் போக்குவரத்து நெரிசலால் திண்டாடும் பயணிகள்: மூணாறில் இ-பாஸ் நடைமுறை..? - Seithipunal
Seithipunal


மூணாறு சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளில் வார இறுதி நாட்கள், பண்டிகை ஆகிய விடுமுறை நாட்கள், சுற்றுலா சீசன் நேரம் ஆகியவற்றின் போது பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.  இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது.

அதனை கட்டுப்படுத்துவதற்கு மாற்று வழிகளை அதிகாரிகள் கையாளுவது இல்லை என்பதால் நெரிசல் தொடர் கதையாகியுள்ளது. தற்போது ஆயுத பூஜை தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பகுதிகளில் பல கி.மீ., தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றுள்ளன. அதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிட்டதால் பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் கடுமையாக அவதியுற்றுள்ளனர். 

இவ்வாறு நூற்றுக்கணக்கில் சுற்றுலா வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் பல ஆண்டுகளாக தொடர்வதால், ஆம்புலன்ஸ் வாகனம், அவசர தேவைக்கு செல்வோர் உள்பட பல தரப்பு மக்கள் வாகன நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன், பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை தொடர முடியாமல் உள்ளனர். 

இந்நிலையில், சமீபத்தில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ - பாஸ் முறை நடைமுறைபடுத்தப்பட்டது.

அதேப்போல, வால்பாறையில் நவம்பர் ஒன்று முதல் இ-பாஸ் முறை நடை முறைபடுத்தப்படவுள்ளது.  அது போன்று மூணாறில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ் முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

E pass implemented in Munnar due to heavy traffic congestion


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->