மர்ம முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல இயக்குனர் - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு அருகே கோலேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் கோலேரி. பிரபல சினிமா இயக்குநரான இவர் கடந்த 1987ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 35 ஆண்டுகளாக மலையாள திரை உலகில் பணிபுரிந்து வந்துள்ளார். 

இவர் கடந்த 1987ம் ஆண்டு வெளியான 'மிழிதளில் கண்ணீருமே' என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி 'அவன் அனந்தபத்மநாபன்', 'தீர்க்கசுமங்கலிபவ' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக  கடந்த 2004ம் ஆண்டு 'பாட்டு புஸ்தகம்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இவர் திரைத்துறையில் படங்களை இயக்காவிட்டாலும், பாடல்கள் எழுதுவது, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், பிரகாஷ் கடந்த 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே பிரகாஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீஸாருக்கு அளித்த தகவலின் படி அவர்கள் விரைந்து வந்து பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மாரடைப்பு காரணமாக பிரகாஷ் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director prakash koleri died in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->