பஸ்டேக் இருந்தா மட்டும் தான் அனுமதி - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பாஸ்டாக் வருடாந்திர பாஸ் பற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்த பாஸின் விலை 3000 ரூபாய் மட்டுமே. இது இந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த பாஸ்டாக் வருடாந்திர பாஸ் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த பாஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களில் வரக்கூடிய பக்தர்களின் உடமைகள் சோதனை செய்த பின்னர் சாலையில் செல்வதற்கான சுங்கக்கட்டணம் செலுத்திய பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக கூட்ட நேரிசல் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாஸ்டேக் இருந்தால் மட்டுமே கட்டாயமாக வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதே நேரத்தில் பாஸ்டேக் வழங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழ் திருப்பதியில் இருந்து மேல்திருப்பதி செல்லும் வாகனங்களில் பாஸ்டாக் இல்லாத வாகனங்கள், அலிப்பிரியில் அதை வாங்கிய பிறகே மலையேற அனுமதிக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotees allowed with fastag in tirupathi


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->