நூறு கோடி காசோலையை காணிக்கையாக செலுத்திய பக்தர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நூறு கோடி காசோலையை காணிக்கையாக செலுத்திய பக்தர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பண்ணா வராகலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. 

அந்தவகையில், நேற்று கோவில் அதிகாரிகள் சார்பில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்றை எடுத்து பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அந்தக் காசோலையில், நூறு கோடி ரூபாய்க்கு கோவில் பெயரில் காணிக்கையாக எழுதப்பட்டிருந்தது. 

 

இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பொட்டேபள்ளி ராதாகிருஷ்ணாவின் சேமிப்பு கணக்கு காசோலை என்பது தெரிய வந்தது. மேலும், அந்தக் காசோலை எம்விபி டபுள் ரோடு கோடக் வங்கி கிளையின் பெயரில் இருந்தது. 

மேலும், அந்த காசோலையில் முதலில் ரூ. பத்து என்றும், பிறகு அதனை அடித்து நூறு கோடி என்றும் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, கோவில் அதிகாரிகள் வங்கிக்குச் சென்று அந்த சேமிப்பு கணக்கு குறித்த தகவல்களை விசாரித்தனர். அப்போது தான் அந்த சேமிப்பு கணக்கில் வெறும் பதினேழு ரூபாய் மட்டும் இருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து கோவில் அதிகாரிகள், காசோலையை காணிக்கையாக போட்டவரைக் கண்டுபிடித்து, இனி இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

devotee hundrad crores cheque unveils in appanna varakalatchumi narasima swamy temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->