இஸ்லாமிய பெண்கள் தான் குறி...! பெண் நீதிபதி உள்பட  50 பெண்கள்... வசமாக சிக்கிய ஜெகஜால கில்லாடி! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் திருமணம் செய்வதாக ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமண வரன் பார்க்கும் வலைத்தளங்கள் மூலமாக, பணக்கார இஸ்லாமிய பெண்களை மட்டும் குறி வைத்து, முகீம் அயூப் கான் என்ற நபர் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.

38 வயதாகும் முகீம் அயூப் கான், திருமணமாகாத விதவை மற்றும் விவகாரத்து ஆன இஸ்லாமிய பெண்களை குறி வைத்து, அவர்களின் செல்போன் என்னைப் பெற்று, நட்பாக பழகி பழகி உள்ளார். 

பின்னர் அவர்களிடம் தான் ஒரு அரசு ஊழியர் என்றும், தனது மனைவியை இழந்து குழந்தை வளர்க்க முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக சொல்லி, அவர்களிடமிருந்து அனுதாபங்களை பெற்றுள்ளார். 

பின்னர் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவரின் மனைவி, குழந்தை உள்ளிட்ட புகைப்படங்களை அந்த பெண்களுக்கு அனுப்பி, அந்த பெண்களின் குடும்பத்தினரை சந்தித்து, திருமண பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இதில் ஏமாறக்கூடிய பெண் மற்றும் அவரின் குடும்பத்தாரிடம், திருமண செலவுகளுக்காக பணத்தை பெற்று விட்டு, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, அங்கிருந்து தப்பித்து விடுகிறார். 

இதேபோல சுமார் 50 பெண்கள் பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளார் முகீம் அயூப் கான். இதில் பெண் நீதிபதி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.

தற்போது முகீம் அயூப் கானை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த தகவல்களையும் பெற்று, அவர்களையும் முகீம் அயூப் கான் மீது புகார் அளிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Young man 50 Islam Lady marriage forgery case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->