இனி மாஸ்க் இங்க மட்டும் தேவையே இல்லை - வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தற்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன்காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்தி மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. 

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுவது. திரையரங்குகள் 100 % பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி என்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், காரில் தனியாக செல்பவர்களுக்கு மட்டும் மாஸ்க் குறித்து விதிக்கப்பட்ட விலக்கு இன்னும் அமலில் இருப்பது ஏன் என்று, டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனையடுத்து, தேசிய தலைநகர் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளை மறு ஆய்வு செய்யும் கூட்டத்தில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.

மேலும், காரில் கூட்டாக சென்றாலும் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்து என்றும், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராத தொகை விதிக்கப்படும்  என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Inside Car Mask No Need


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->