புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்: சர்ச்சையை கிளப்பிய மந்திரி ரோஜா!
cyclone mishanga minister roja dance rain
தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இது 10 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி 40 லட்சம் பேர் அவதியடைந்துள்ளனர்.
புயல் காரணமாக ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகையும் ஆந்திராவின் சுற்றுலாத்துறை மந்திரியுமான ரோஜா களப்பணியில் ஈடுபட்டுள்ளார். புத்தூர் பேரூராட்சி அலுவலகம் பகுதியில் கனமழை பெய்த போது மந்திரி ரோஜா குடையை வைத்துக்கொண்டு மழையில் நடனமாடியபடி ரசித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. புயல் மழையால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மந்திரி ஒருவர் மலையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில், சந்திரபாபு நாயுடு கடந்த காலங்களில் முதல்வராக இருந்த போது இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிதும் உதவி செய்தோம்.
ஆனால் ரோஜா தற்போது மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மந்திரி ரோஜாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
cyclone mishanga minister roja dance rain