திருநங்கைகள் வீடுகளில் திடீர் சோதனை: சிக்கிய கோடிக்கணக்கான பணம், தங்க நகைகள்..?
Crores of cash and gold jewellery seized in surprise raid on transgender houses in Mumbai
வரி ஏய்ப்பு புகாரையடுத்து திருநங்கைகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரொக்கப் பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் சிலர், வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், கணக்கில் காட்டப்படாத சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் மும்பையில், திருநங்கைகளின் வீடுகளில் அதிரடி சோதனையைத் தொடங்கினர். விடிய விடிய சோதனை நீடித்ததால், அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் சோதனையின் போது, திருநங்கைகள் வீட்டில் அடுத்து, கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சோதனை நடந்த வீடுகளில் இருந்து முக்கிய நிதி ஆவணங்கள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதோடு, அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சோதனை நடந்த போது, ரயீசா என்ற திருநங்கை ஒருவர் தனது வீட்டில் அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
English Summary
Crores of cash and gold jewellery seized in surprise raid on transgender houses in Mumbai