அசுர வேகத்தில் கொரோனா பரவினாலும்., மீண்டும் முழு ஊரடங்கிற்கு அவசியமில்லை.! அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக டெல்லியில் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை-இன்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி, அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வந்தாலும் பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதுதான் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona issue delhi no more full lockdown


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->