#BigBreaking || கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்து..!!
Coromandel Express passenger train collides with goods train
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹவுராவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாலசோர் மாவட்ட ஆட்சியர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார். இரவு நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த கோர விபத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் பல பெட்டிகள் தடம் புரண்டு உள்ளதால் உயிர் பலி ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
English Summary
Coromandel Express passenger train collides with goods train