5-12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோர்பிவேக்ஸ் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


5-12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோர்பிவேக்ஸ் மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது.

மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி செலுத்துதல் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 5 முதல் 12 வயது உட்பட்டவர்களுக்கு கோர்பிவேக்ஸ் மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 முதல் 12 வயது சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் மற்றும் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கோவிட்-19 திட்டத்தின் கீழ் இவற்றை சேர்ப்பது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corbevax and covaxin vaccines for children aged between 5 to 12


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->