காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்த ஜி.கே வாசன்.!
congress party about says g.k vasan
பிரதமராக ஆசைப்பட்டு கனவு கண்ட வாரிசுகள் எல்லாம் முகவரிகள் தெரியாமல் சுற்றுகின்றனர். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வாசன் அதில் பேசியதாவது: பிரதமராக வர வேண்டும் என்று கனவு கண்ட பல தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் தற்போது முகவரியை இல்லாமல் சுற்றி வருகின்றனர். என்பது தான் உண்மை நிலை என்று கூறினார்.

தற்போதைய அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சி தகுதியை கூடப் பெற முடியாத பரிதாப நிலையிலே காங்கிரஸ் இருந்து கொண்டிருக்கிறது. வாக்கு வங்கியை அதிமுக ஆட்சியைத் தக்க வைத்ததில் தமாகாவின் பங்கு மிக முக்கியமானதாகும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன் பேசினார்.
English Summary
congress party about says g.k vasan