#BREAKING | நான் கைது செய்யப்பட்டாலும் கேள்வி கேட்பேன் - ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துவது, "அதானியிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டேன்... இந்தியாவில் ஜனநாயகத்திற்காக தொடர்ந்து கேள்விகள் கேட்டு போராடுவேன்.

நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது, பின்னர் மக்களவை சபாநாயகருக்கு விரிவான பதில் எழுதினேன். நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில அமைச்சர்கள் என்னைப் பற்றி பொய் சொன்னார்கள். 

ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன், பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்.

நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் முன்னரும் பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன்

அதானி குறித்த எனது பேச்சுக்கு பிரதமர் பயப்படுகிறார், அதை அவர் கண்களில் பார்த்திருக்கிறேன். அதனால்தான் முதலில் கவனச்சிதறல் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளேன்.

எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன், அது என் வேலை, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது கைது செய்யப்பட்டாலும் அதைத் தொடர்ந்து செய்வேன். 

இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, அதனால்தான் இதைச் செய்கிறேன். அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு 20,000 கோடி போனது யாருடையது? என்ற எளிய கேள்வியில் இருந்து பிரதமரைக் காக்க நடத்தப்படும் முழு நாடகமும் இதுதான். 

இந்த அச்சுறுத்தல்கள், தகுதி நீக்கம் அல்லது சிறைத் தண்டனைகளுக்கு நான் பயப்படவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader Rahul Gandhi day after his disqualification as MP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->