மோடியின் நாடகம்... பதவியேற்கும் நாளில் பரபரப்பை உண்டாக்கிய டிவிட்! - Seithipunal
Seithipunal


தமிழக வரலாற்றின் சிறப்பு மிக்க அடையாளமான செங்கோலை வைத்து மோடி நடத்திய நாடகத்தை தமிழக வாக்காளர்களும், இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்களும் நிராகரித்து உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனை அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். மேலும் அவரின் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாமல் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதை விமர்சித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 

"கடந்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோளுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் அடி எடுத்து வைத்தார். இந்த நிகழ்வானது மோடி தன்னை ராஜாவை போன்றவர் என்ற பிம்பத்தை உருவாக்கி, தமிழக மக்களின் வாக்குகளை கவர்வதற்காக, கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நடந்த நிகழ்வை போன்று சித்தரித்திருந்தார். 

ஆனால் பிரதமர் மோடி அன்று நடத்திய போலி கும்பத்தை அப்போதே நான் வெளிப்படுத்தி விட்டேன். அந்த நாடகத்திற்கான விடை இப்போது நாம் அறிந்து கொண்டோம். 

தமிழ் வரலாற்றின் மதிப்புமிக்க அடையாளமான செங்கோலை வைத்து மோடி நடத்திய நாடகத்தை தமிழ் வாக்காளர்களும், இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்களும் நிராகரித்துவிட்டனர்.

மோடி தனிப்பட்ட நபராகவும், அரசியல் ரீதியாகவும், தார்மீக அளவிலும் ஒரு மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளைப் போல் அல்லாமல், இந்திய அரசமைப்புக்கு அவர் அடிபணிய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்" என்று ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Jaiyram Ramesh say About PM Modi And Sengol


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->