நாடாளுமன்ற எம்.பி சுதாவின் தங்கநகை பறிப்பு - மர்ம நபர்கள் கைவரிசை.!!
congrass mp sudha gold chain seized in delli
கடந்த 21-ந்தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட எம்.பி. சுதா, டெல்லியில் தங்கி இருந்து கூட்டத் தொடரில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், எம்.பி சுதா இன்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அந்தப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே சுதா, மர்ம நபரிடம் இருந்து செயினை காத்துக்கொள்ள போராடியும் அவரால் முடியாததால் மர்ம நபர் சுதாவை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இந்தச் சம்பவத்தில் எம்.பி சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சம்பவம் குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினரிடமே மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
congrass mp sudha gold chain seized in delli