காங்கிரஸ் கட்சிக்கு முதல் எதிரி ஆம் ஆத்மி தான் - எம்.எல்.ஏ விஜயதாரணி.! - Seithipunal
Seithipunal


இன்று ஹலோ எப்.எம்.மில் ஒலிபரப்பாக உள்ள ‘ஸ்பாட்லைட்’  என்ற நிகழ்ச்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், கட்சியின் எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி பேசியதாவது,

"குஜராத் மாநிலத்தை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளோம்.

இதற்கு காரணம் மதச்சார்பற்ற வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையாக வராதது தான். இந்த வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மி கட்சியால் சிதறி போய் விட்டது. 

இதுவரை எங்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே இருந்த நேரடி போட்டி, தற்போது ஆம் ஆத்மியால் மும்முனை போட்டியாக மாறி உள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முதல் எதிரி பா.ஜ.க. இல்லை, ஆம் ஆத்மி தான். 

இதையடுத்து இமாசலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணம், அங்கு நிலவும் உள்ளூர் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுத்து பிரசாரம் செய்ததும், விவசாயிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், பிரியங்கா காந்தியின் தீவிர பிரசாரம் மற்றும் ஆலோசனைகளும் தான்" என்று அவர் பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழக காங்கிரசில் நிலவும் கோஷ்டி மோதல் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது. அதற் அவர் பதில் அளித்ததாவது, "காங்கிரசில் கோஷ்டி மோதல் இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியம். இது தவிர்க்கமுடியாதது தான். 

வரும் பிப்ரவரி மாதத்துடன் கே.எஸ். அழகிரியின் பதவி முடிவடைவதால், பல தலைவர்கள் மனு கொடுத்து உள்ளார்கள். நானும் இந்த பதவிக்கு முயற்சி செய்து வருகிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை வகிப்பதற்கு எனக்கு தகுதி இருக்கிறது" என்று பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass mla vijayathaarani speach in hello fm spot light programme


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->