உ.பியில் மாநிலங்களவை இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பு.!
coming 15th rajya sabha election in uttar pradesh
உ.பியில் மாநிலங்களவை இடைத்தேர்தல் எப்போது? - தேர்தல் கமிஷன் அதிரடி அறிவிப்பு.!
உத்தரபிரதேசம் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஹர்த்வார் துபே. பா.ஜ.காவை சேர்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி காலமானார்.
ஆனால், அவருடைய பதவிக்காலம், வருகிற 2026-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது. இந்த நிலையில், தேர்தல் கமிஷன் காலியாக உள்ள அந்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி நடைபெறும் இந்தத் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால், அன்று மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
ஓட்டுப்பதிவு முடிவடைந்த ஒரு மணி நேரம் கழித்து, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். மேலும், அன்றைய தினமே வெற்றியாளர்களை அறிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
English Summary
coming 15th rajya sabha election in uttar pradesh